பக்கங்கள்

பக்கங்கள்

30 ஆக., 2013

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார - விநாயகமூர்த்தி புகழாரம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்துள்ளமையை வரவேற்கின்றேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் ‘ஒற்றுமைமிக்க சகோதரத்துவத்துடன் இணைந்த இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இவர் தொடர்ந்துரையாற்றுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தற்போது இலங்கை வந்துள்ளதை நாம் வரவேற்கின்றோம்.
அவரின் வருகையானது இங்குள்ள உண்மையான நிலைவரத்தை அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும்.
இலங்கையில் மனித உரிமையும் மக்களுக்கான சுதந்திரமான சூழலும் சிறப்பாக காணப்படுகின்றது.
வட மாகாண சபை தேர்தல் நடைபெறாது என்று கூறப்பட்ட போதும், இப்போது நடைபெறப் போகின்றது. சுதந்திரமான இத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதியாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உள்ளார்.இவர் பாராளுமன்றத்திலும்,அதற்கு வெளியேயும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார்.
இவ்வாறான சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்கும் சூழ்நிலை இங்கு ஏற்பட்டுள்ளது.
மொழியை விருத்தி செய்வதற்கும், மொழிகளின் மூலம் சமூகங்களை இணைப்பதற்கும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முயற்சித்து வருகின்றார்.
ஐம்பது வருடகால அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் ஒரு அரசியல்வாதியாக அவர் காணப்படுகின்றார் எனவும் தெரிவித்தா