பக்கங்கள்

பக்கங்கள்

30 ஆக., 2013

முஸ்லிம்களுக்கெதிரான சம்பவங்கள் குறித்து நவநீதம்பிள்ளையிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மத உரிமை மீறல்கள், இனவாத அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விரிவான அறிக்கை
ஒன்றினை ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நேரில் கையளித்துள்ளது.

நவநீதம்பிள்ளை நேற்று புதன்கிழமை திருகோணமலையில் வைத்து சிவில் சமூக பிரதிநிதிகளைச் சந்தித்த போதே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கப் பிரதிநிதிகளால் இவ் அறிக்கை அவரிடம் கையளிக்கப்பட்டது.

யுத்தத்திற்கு பிந்திய கடந்த மூன்று வருடங்களாக முஸ்லிம்களின் மத உரிமைகளை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் வெறுப்புணர்வுப் பிரசாரங்கள் என்பன அவ் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் முஸ்லிம்களின் கலாசார உரிமைகளுக்கு எதிரான இனவாத அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தொடர்பிலும் முஸ்லிம்களின் வியாபார நலன்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பிலும் இவ்வறிக்கையில் விரிவானதும் ஆதாரபூர்வமானதுமான விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.