பக்கங்கள்

பக்கங்கள்

30 ஆக., 2013

சிறையில் கொல்லப்பட்ட நிமலரூபனின் தாயை அரவணைத்தார் நவிப்பிள்ளை

வவுனியா விளக்க மறியல் சிறைச்சாலையில் வைத்து கொலை செய்யப்பட்ட நிமலரூபனின் தாயார் கதறியதைக் கண்ட நவநிதம்பிள்ளை அவரை அரவணைத்து ஆறுதல் படுத்தியுள்ளார்.
Nimala Rooban mother_CI
புலிச் சந்தேகநபர் என்று கருதப்பட்டு கணேசன் நிமலரூபன் கைது செய்யப்பட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கைதிகளுக்கும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது திட்டமிட்டு தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
நிமலரூபனின் தாயார் இன்றைய தினம் யாழில் நடந்த காணாமல் பொன உறவுகளின் போராட்டத்தில் பங்கெடுத்தார். அத்துடன் நவநீதம்பிள்ளையை சந்தித்த குறித்த குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார்.
முள்ளியவாய்க்கால் போரினால் பாதிக்கப்பட்ட எட்டுப் பேர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். போரில் உடல் முழுவதும் பாதிக்கப்பட்ட காயங்களைக் கொண்ட யுவதி ஒரவரும் நவநீதம்பிள்ளையைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தியும் கலந்து கொண்டார். தமது பிரச்சினைகள் குறித்து பேசிய எட்டுப் பேரையும் கலங்கிய முகத்தோடு நவநீதம்பிள்னை பார்த்தார்.