பக்கங்கள்

பக்கங்கள்

30 ஆக., 2013

மாசிலாமணி ஜெகதீஸ்வரன் pung 7

திரு மாசிலாமணி ஜெகதீஸ்வரன்
(ஆனந்தன்)
இறப்பு : 27 ஓகஸ்ட் 2013
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அன்னசத்திர ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட மாசிலாமணி ஜெகதீஸ்வரன் அவர்கள் 27/08/2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மாசிலாமணி அன்னலட்சுமி தம்பதிகளின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை சொர்ணலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மஜீதன், யசிந்தன், லக்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசோதி, மன்மதராசா, உதயசோதி, கலா, பவானி, ஜீவா, கிருபா ஆகியோரின் அன்புச் சகோதரனும்.
வரதராசா, காலஞ்சென்ற ஜெயராசா, ராஜலட்சுமி(UK), சிவானந்தன்(UK), மாகாலட்சுமி, சதானந்தன்(UK) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை 29/08/2013 வியாழக்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கோம்பையன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447939637040
மஜீதன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777698409