பக்கங்கள்

பக்கங்கள்

26 ஆக., 2013

முள்ளிவாய்க்காலில் முகாம்களை அவசரமாக அகற்றிய படையினர்: நவிப்பிள்ளை வருகையின் எதிரொலி?

இறுதிக்கட்டச் சமர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களை முற்றாக அகற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக மிகத்
தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நேற்று 'மினி' இராணுவ முகாம்கள், சோதனைச் சாவடிகள், தூரப்பார்வை கண்காணிப்பு அரண்கள் (உயரமான காவலரண்) ஆகியவை அவசர அவரசரமாக அகற்றப்பட்டுள்ளன.
இராணுவத்தினர்போன்று உடையணிந்தவர்களே இந்த நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டனர் என்று மக்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே அங்கிருந்த கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றிய படையினர் தற்போது முகாம்களையும் அகற்றிவருகின்றனர்.ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முக்கியமாக இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் செல்வதற்குத் திட்டமிட்டுள்ளார்.

-