பக்கங்கள்

பக்கங்கள்

27 ஆக., 2013

ஆனந்திக்காக அதிர்ந்த வீரசிங்கம் மண்டபம்!!

யாழ்ப்பாணத்தினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெறப்போகும் ஆசனங்களே அறுதிப்பெரும்பான்மையின்மையினை பெற்று ஆட்சி அமைக்க முடியுமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும்.ஆனாலும் இதை செய்ய தவறிவிட்டு முதலமைச்சராக பதவியேற்கவுள்ள சீ.வி.விக்கினேள்வரனை குற்றஞ்சாட்டுவது பொருத்தமற்றதென கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற அங்கத்தவருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை தேர்தலிற்கான முதலாவது பொது பிரச்சாரக்கூட்டம் இன்று யாழப்பாணத்தினில் வீரசிங்கம் மண்டபத்தினில் நடைபெற்றிருந்தது.அனைவரதும் எதிர்பார்ப்பினையும் பொய்ப்பிக்கும் வகையினில் ஆயிரத்திற்கும் அதிகமான ஆதரவாளர்களினால் மண்டபம் நிரம்பி வழிந்தது.இதனால் ஒரு புறம் வீதியினில் வாகனங்களில் அமர்ந்திருந்தும் போதுமக்கள் பரப்புரைகளை கேட்டவண்ணமிருந்தனர்.

கூட்டமைப்பின் வேட்பாளர்கள் பெயர் விபரங்களை கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா அறிவிக்க அவர்கள் தம்மை தாமே அறிமுகப்படுத்திக்கொண்டனர்.அதனை தொடர்ந்து மாவை சேனாதிராசாவின் தலைமை உரையினை ஆற்றியிருந்தார்.தொடர்ந்து சுரேஸ்பிறேமச்சந்திரன் சிறீகாந்தா, சம்பந்தன், சித்தார்த்தன், சுமந்திரன் என பலரும் சிறப்புரைகளை ஆற்றியிருந்தனர்.

முன்னதாக விடுதலைக்கு ஆகுதியான அனைத்து மாவீரர்கள் மற்றும் பொதுமக்களிற்கு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பகிரங்க அறிவிப்பின் பின்னர் எழுந்து நின்று இருநிமிட அஞ்சலி செலுத்திய பின்னரே அறிமுகப்படுத்தல் நிகழ்வு ஆரம்பமானது. வேட்பாளபாளர்கள் சயந்தன் மற்றும் அனந்தி சசிதரனது பேர்கள் அறிவிக்கப்பட்ட வேளை ஆதரவாளர்கள் பெருமளிவினில் கரகோசம் எழுப்பி தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

பெருமளவினில் படைப்புலனாய்வாளர்கள் மற்றும் சிவிலுடையிலிந்த பொலிஸாரும் அங்கெங்கும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.