பக்கங்கள்

பக்கங்கள்

30 ஆக., 2013

பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரிடம் முறையிடப்படும்: விக்னேஸ்வர
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வடபகுதிக்கு விஜயம் செய்த போது, அவரிடம் முறைப்பாடுகளை முன்வைத்த பல பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்டது தொடர்பாக நவிபிள்ளையிடம் முறையிடப்படும் என கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று மனித உரிமை ஆணையாளரை கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆணையாளர் வடக்கு சென்ற போது அவரிடம் பேசிய பொதுமக்கள் பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
வடபகுதியின் தற்போதைய நிலைமைகள் குறித்து கூட்டமைப்பு மனித உரிமை ஆணையாளரிடம் தெளிவுப்படுத்தியுள்ளது.
மனித உரிமை ஆணையாளர் தனது விஜயத்தின் முடிவில் இந்த விடயங்கள் தொடர்பில் நடுநிலையான அறிக்கையை முன்வைப்பார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது.
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான்-கீ மூனுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான உடன்படிக்கையை செயற்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக மனித உரிமை ஆணையாளர் கூறினார் என்றார்.