பக்கங்கள்

பக்கங்கள்

30 ஆக., 2013

இளம் யுவதியை அழைத்துச் சென்ற இராணுவ வீரரை தேடும் பொலிஸார்
திருமணம் செய்து கொள்ளும் வயதை எட்டாத இளம் யுவதியை ரகசியமாக அழைத்துச் சென்ற இராணுவ வீரரை தேடும் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

காலி ரத்கம பன்வில பிரதேசத்தை சேர்ந்த இளம் யுவதியை இந்த இராணு வீரர் இரகசியமான முறையில் பிரதேசத்தில் இருந்து அழைத்துச் சென்றுள்ளார்.
14 வயதான யுவதியை இராணுவ வீரர் ரகசியமான முறையில் அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவர் சாலியபுர இராணுவ முகாமில் சேவையாற்றி வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இராணுவ வீரருக்கும் 14 வயதான இளம் யுவதிக்கும் காதல் தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
யுவதியின் தாய் செய்த முறைப்பாட்டை அடுத்தே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.