பக்கங்கள்

பக்கங்கள்

23 ஆக., 2013

ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உபத்திரவம் செய்ய வேண்டாம்: சத்தியராஜ்
ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யமால் இருந்தால் போதும் என நடிகர் சத்தியராஜ் கேட்டுக்கொண்டார்.
சென்னை சத்தியம் திரையரங்கில் ஆர்யா, நயன்தாரா நடித்துள்ள ராஜா ராணி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மெட்ராஸ் கபே படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அதில் ஈழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தி இருப்பதாக கேள்விபட்டேன்.  விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் இருந்தால் போதும்.
ஒருவேளை உண்மையாகவே ஈழ விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தியிருந்தால் அது மிகப் பெரிய தவறு. உதவி செய்ய வேண்டாம். உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும் என்றார்.