பக்கங்கள்

பக்கங்கள்

23 ஆக., 2013

மலையகத்தில் தொண்டமானின் பலத்தை உடைக்கும் நடவடிக்கையில் கோத்தபாய?
மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இருப்பதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
திகாம்பரத்தின் தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணியின் வெற்றிலைச் சின்னத்தில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
தமது கட்சிகளின் அதிகளவான பிரதிநிதிகளை மாகாண சபைக்கு தெரிவு செய்ய இவர்கள் இடையில் விருப்பு வாக்கு போட்டி தலை தூக்கியுள்ளது.
மலையகத்தில் அமைச்சர் தொண்டமானுக்கு இருக்கும் பலத்தை உடைக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, திகாம்பரத்தை பயன்படுத்துவதாக தொண்டமான் ஆதரவாளர்கள் இடையில் கருத்து நிலவுவதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி இந்த இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்கள் இடையில் மோதல் ஏற்பட்டது.
அதேவேளை அமைச்சர் தொண்டமான் வெளியிடங்களில் இருந்து அழைத்து வந்துள்ள எட்டு ரௌடிகள் கொட்டகலை கூல் ஹில் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.