பக்கங்கள்

பக்கங்கள்

30 ஆக., 2013

இலங்கை அரசாங்கத்தின் அத்துமீறல்கள்: கண்ணை மூடிக் கொள்ளுமா ஐ.நா?
எதிர்வரும் செப்டம்பர் மாத மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் யாழ்ப்பாண குடாநாட்டின் இராணுவ முகாம்கள் வெற்றுப்படுத்தப்படும் என்று இராணுவவத்தினர் அறிவித்துள்ளனர்.
எனினும், யாழ்ப்பாண குடாநாட்டில் இராணுவமயம் குறைக்கப்படும் வாய்ப்புக்களை காணமுடியவில்லை என்று யாழ்ப்பாண மக்கள் தெரிவிப்பதாக குரோபல் போஸ்ட் தளத்தில் செய்தியாளர் ஜே.எஸ் திஸ்ஸநாயகம் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் 2012.13 ஆண்டுகளில் வடக்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் வடக்குகிழக்கில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற இரண்டு யோசனைகள் நிறைவேற்றப்பட்டன.
எனினும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் படைக்குறைப்பு என்ற விடயம் இன்னும் அமுல்செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக படையினர் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், தேர்தல் பிரசாரங்களின் போது சாதாரண உடைகளில் படையினர் வேவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்தநிலையில் இலங்கைக்கு சென்றிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் செப்டம்பரில் சமர்ப்பிக்கும் அறிக்கை எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படைக்குறைப்பு மற்றும் தனியார் காணிகளை இராணுவத்தினர் அபகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்குமா அல்லது கண்ணை மூடிக்கொள்ளுமா என்று செய்தியாளர் திஸ்ஸநாயகம் கேள்வி எழுப்பியுள்ளார்.