பக்கங்கள்

பக்கங்கள்

3 செப்., 2013

தாய்லாந்து மெய்வல்லுனர் போட்டி; இலங்கை வீரர்கள் பங்கேற்பு

தாய்லாந்தில் இன்று 03ம் திகதி முதல் 06 வரை நடைபெறும் மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக கலந்து கொள்வதற்காக எட்டு வீர வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர்
என இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் ஊடக முகாமையாளர் தெரிவித்துள்ளார். செப்டெம்பர் 02ம் திகதி இக்குழு தாய்லாந்திற்கு புறப்பட வுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தெரிவிக்கின்றது.
தாய்லாந்து பயணமாகும் பெயர்களின் விபரங்கள் வருமாறு:-
எச். கே. காளிங்க குமாரகே 400 மீற்றர், எல். எம். சொய்ஸா 800 மீற்றர், நிஸ்ஸங்க குமார 1500 மீற்றர், கே. எம். என். ஜே. குணதிலக 1500 மீற்றர், டீ. எஸ். ரணசிங்க ஈட்டி எறிதல், ஈ. எஸ். யூ. ரட்னகுமார 400 மீற்றர், நிலுகா கீதானி ராஜசேகர 1500- 5000 மீற்றர், டி. ஏ. எஸ். சமன்மலி 800- 5000 மீற்றர் யஸரோஹன் டி சில்வா (பயிற்றுவிப்பாளர்) என். கே. அஜித் நாரங்கல (முகாமையாளர்) ஆகிய அதிகாரிகள் அணியுடன் செல்கின்றனர்.