பக்கங்கள்

பக்கங்கள்

3 செப்., 2013

கச்சத்தீவை திரும்ப பெறுவது குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவேன் : ஜி.கே.வாசன் 
தமிழர்களுக்கு விரோதமான செயலில் தொடர்ந்து ஈடுபடும் இலங்கை அரசிடமிருந்து கச்சத்தீவை  திரும்ப பெறுவது குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவேன் என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவத்துள்ளார்.


டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் முன்னர் விமானநிலையத்தில் வைத்தே அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

கச்சத்தீவை 1974ம் ஆண்டு இந்திய அரசு இலங்கையிடம் ஒப்படைத்தது. ஆனால் அப்போது, அதாவது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ள சூழ்நிலை வேறு.தற்போதைய சூழல் வேறு என்றார்.

அப்போது இலங்கை நம் நாட்டுடன் நெருங்கிய நட்புறவு நாடாக இருந்தது. தற்போது முன்புபோல் இலங்கை இல்லை. தமிழர்களுக்கு விரோதமான செயலில் தொடர்ந்து ஈடுபடுகிறது.

நம் இந்திய மீனவர்கள் கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்க சென்றால் அவர்களை அடித்து உதைத்து கைது செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது.

இந்த நிலையில் கச்சத்தீவை திரும்ப பெறுவது அவசியம். எனவே இதுபற்றி பிரதமரிடமும் வெளியுறவு துறை அமைச்சரிடமும் தொடர்ந்து வலியுறுத்துவேன் என்றார்.