பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2013

தொலைபேசியில் அறிமுகமான பெண்ணை சந்தித்த முதல் நாளே வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கைது
தொலைபேசியில் உரையாடி அறிமுகமான இளம் பெண்ணை சந்தித்த முதல் நாளே அந்த பெண்ணை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பலப்பிட்டிய கொஸ்கொட பகுதியில் வகிக்கும் திருமணம் செய்யும் வயதை எட்டாத பெண்ணொருவருடன் தொலைபேசி தொடர்பு மூலம் ஏற்பட்ட பழக்கத்தை அடுத்து, அந்த நபர் குறித்த பெண்ணை சந்திக்க சென்றுள்ளார்.
கொஸ்கொட பகுதிக்கு சென்ற சந்தேக நபர் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் 21 வயதான நபரே இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் தொலைபேசிக்கு கிடைத்த தவறான அழைப்பு (மிஸ்ட் கோல்) ஒன்றின் மூலம் கொஸ்கொட வத்துருவல பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான யுவதியுடன் இந்த நபர் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண்ணை சந்திப்பிதற்காக கொஸ்கொடவில் உள்ள பெண்ணின் வீட்டுக்கு சந்தேக நபர் சென்றுள்ளார்.
அந்த பெண் தான் எண்ணியது போன்று அழகானவர் அல்ல என்பதையும் பேசியதில் அவர் புத்திசாதூர்யமானவர் அல்ல என்பதையும் சந்தேகநபர் அறிந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் யுவதியின் பெற்றோர் சந்தேக நபருக்கு வழங்க மதிய உணவை தயார் செய்து கொண்டிருந்த போது, யுவதியை அவரது பாட்டி வீட்டுக்கு அழைத்து சென்ற சந்தேக நபர் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து மதிய உணவையும் உட்கொள்ளாது சந்தேக நபர் அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளார். அவர் சென்ற பின்னர் யுவதி தனது அத்தையிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடு செய்யப்பட்டது. இதன் பிறகு பொலிஸார் தம்புத்தேகம பிரதேசத்திற்கு தமது குழுவொன்றை அனுப்பி சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.