பக்கங்கள்

பக்கங்கள்

29 செப்., 2013

இரண்டு கைக்குழந்தைகளை ஆற்றில் வீசி தாய் தற்கொலை 
குமாரப்பாளையத்தை அடுத்த பழைய காவிரிபாலத்தில் 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் இரண்டு கைக்குழந்தையுடன் மாலை நேரத்தில் நடந்து சென்றார். 


ஆற்றின் நடுவே சென்ற போது கையில் வைத்து இருந்த இரண்டு குழந்தைகளையும் ஆற்றில் வீசினார். இதனை கண்டவர்கள் சப்தம் போட்டனர். அடுத்த சிறிது நேரத்தில் அந்த பெண்ணும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்த பெண் யார் என்ற விபரம் தெரியவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மூவரின் உடல்களையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குமாரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த பெண் குறித்து விசாரித்து வருகின்றனர்.