பக்கங்கள்

பக்கங்கள்

29 செப்., 2013


பிரபல ரவுடியின் தலையை துண்டித்த மனைவி 

thx nakeran
 


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் குடித்துவிட்டு அடித்து உதைத்து துன்புறுத்திய கணவனி்ன் தலையை துண்டித்த மனைவி போலிசில் சரணடைந்தார். 
     திருப்பத்தூர் அருகே கல்வெட்டு மேட்டைச் சேர்ந்த சோனைமுத்து மகன் பாரிமன்னன்(32). இவர் கூலித் தொழிலாளி. இவரது முதல் மனைவி மாரிமுத்து. இவர் ஏற்கனவே கணவனின் கொடுமை தாங்காமல் பிரிந்து சென்றுவிட்டார்.
தற்போது தென்மாபட்டு பகுதியைச் சேர்ந்த பில்லப்பன் மகள் பிரவீனா(21) என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இவன் தினமும் குடித்துவிட்டு மனைவியுடனும், அருகில் உள்ளவர்களிடமும் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான்.
இவன் மீது திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் அடிதடி, திருட்டு, செயின்பறிப்பு, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவன் வெள்ளிக்கிழமை இரவு தென்மாபட்டு பகுதியில் உள்ள 2வது மனைவியின் வீட்டிற்குச் சென்று அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளான்.
கணவனின்  செயலை பொறுக்கமுடியாத பிரவீனா ஆத்திரமடைந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள் ளார். இதில் அவனது தலை துண்டாகிவிட்டது.
பின்னர் திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்திற்குச் சென்று, நடந்த சம்பவத்தைக் கூறி சரணடைந்தார். இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரவீனா விசாரிக்கப்பட்டு வருகிறார்.

-நா.ஆதித்யா