பக்கங்கள்

பக்கங்கள்

2 செப்., 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண தேர்தல் விஞ்ஞாபனம் நாளை யாழில் வெளியீடு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நாளை 3ம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் வெளியிடப்படவுள்ளது.
இவ்வைபவத்தில் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்கினேஸ்வரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறானதாக அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், வடமாகாண சபை மூலம் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் மற்றும் 13வது திருத்தச் சட்டத்தினை பாதுகாத்து அதற்கப்பால் செல்வதற்கான முயற்சிகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.