பக்கங்கள்

பக்கங்கள்

2 செப்., 2013

விடுதலைப் புலிகள் கோட்பாட்டு ரீதியாக தோற்கடிக்கப்படவில்லை: கெஹெலிய ரம்புக்வெல்ல
விடுதலைப் புலிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த குழுவுக்கு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிப்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக புலனாய்வு பிரிவினர் அறிக்கை வழங்கியிருந்த போதும், அரசாங்கம் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி செயற்படாமல் தேர்தலை நடத்த முன்வந்தாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கண்டியில் மத்திய மாகாண பிராந்திய ஊடகவியலாளர்களுக்காக அரசாங்க தகவல் திணைக்களம் நடத்திய செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயக அம்சங்களை இலங்கை பாதுகாத்து வருகிறது என்பதை உலகத்தை காட்டுவதற்காகவே அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்லை நடத்துகிறது.
அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு அமைவாக ஜனநாயக அம்சங்களை முழுமையாக அமுல்படுத்தியுள்ள நிலையில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்லவதாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றோம்.
ஒரு நாடு சர்வாதிகாரத்தை நோக்கி செல்கின்றது என்றால், அந்த நாடு அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி தேர்தல்களை நடத்தாது இருக்கவேண்டும்.
பிரபாகரனின் இரும்பு பாதணிக்குள் சிக்கி, வாக்களிக்கக் கூட வெளியில் வார முடியாதிருந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து வடக்கில் அரசாங்கம் தேர்தலை நடத்துகிறது.
விடுதலைப் புலிகள் ஆயுதரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதும். அவர்கள் கோட்பாட்டு ரீதியாக அவர்கள் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை.
ஒரு பலவாய்ந்த அணி அந்த கோட்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுகிதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார்.