பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2013

இலங்கை தேசிய அணியில் ஒரே பாடசாலைச் சேர்ந்த 3 தமிழ் மாணவர்கள் 
வரலாற்றில் முதல் தடவையாக வட மாகாணத்தை சேர்ந்த ஒரு தமிழ் பாடசாலையில் இருந்து மூன்று மாணவர்கள் இலங்கையின் தேசிய கால்பந்தாட்ட அணியில்  இடம்பிடித்துள்ளனர்.


ஆசிய கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட போட்டி ஜோர்தானில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஒக்ரோபர் மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த போட்டிக்காக இலங்கையில் இருந்தும் வீரர்கள் செல்லவுள்ளனர் . அதற்கமைய போட்டியில் கலந்துகொள்வதற்காக  மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் மாணவர்களான ஜே.யோண்சன் இ.எஸ்.சஜிவன் இ.எஸ்.கிசோர் ஆகிய மூவரும் ஜோர்தான் செல்லவுள்ளனர்.

முதன்முறையாக இலங்கையின் காற்பந்து போட்டிக்கு வடமாகாணத்தை சேர்ந்த வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டமை இதுவே முதற்தடவையாகும்.