பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2013

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இறுதி பிரசாரக் கூட்டம் பருத்தித்துறையில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி பிரசாரக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு வடமராட்சி வதிரி சந்தியிலுள்ள உள்ளியன் எல்லை அம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைத் தலைவர் க. வியாகேசு தலைமையில் இடம்பெறவுள்ள இக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான க.வி. விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட யாழ். மாவட்ட வடமாகாண வேட்பாளர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இக்கூட்டத்தில் பொது அமைப்புக்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரை கலந்து கொள்ளுமாறு  வடமராட்சி தேர்தல் குழு கேட்டுக்கொண்டுள்ளது.