பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2013

மக்களின் தன்னெழுச்சியான வரவேற்புடன் 8 வது நாளான இன்று பெல்ஜியத்திலிருந்து ஜெனிவாவை நோக்கிய நடைபயணம் Luxemburg ஐ சென்றடைந்துள்ளது.
இலங்கைத்தீவில் சிங்களப் பேரினவாதத்தால் அடிமைகளாக்கப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழினத்திற்கு நிரந்தரமானதும் நிம்மதியானதுமான வாழ்வுக்கு சர்வதேச சமூகம் வழிசமைக்க வேண்டும் என்று நீதி கோரி பெல்ஜியத்திலிருந்து ஜெனிவாவரை  பனிபடர்ந்த வீதி வழியே ஆரம்பிக்கப்பட்ட நடைப்பயணம் தற்போழுது Luxemburg ஐ சென்றடைந்துள்ளது.
Luxemburg சென்றடைந்தவர்களை ஜெர்மன், நெதர்லாந் மற்றும்; லக்சம்பேர்க் நாடுகளில் இருந்ந்து வருகை தந்த  மக்கள அமோக வரவேற்பளித்து அவர்களுக்கு சூடான நீராகாரங்கள் மற்றும் உணவு வகைகளையும் வழங்கி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். குறிப்பாக பிரித்தாணியாவிலிருந்து வாகனத்தில் வருகை தந்த மக்கள் உற்சாகமளிக்கும் விதமாக தாமும் இணைந்து நடந்தனர்.
மற்றும் லண்டன்;, பிரான்ஸ்;, சுவிஸ் போன்ற நாடுகளில் இருந்து தொலைபேசி ஊடாக நடைபயணத்திற்கான தங்களது தார்மீக ஆதரவையும் வாழ்த்துகளையும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நடைபயணத்தை மேற்கொள்வோர் கூறுகையில்:
தமிழினம் காலம் காலமாய் நசுக்கப்படுவதை சர்வதேச சமூகம் நன்கு அறிந்திருந்த போதிலும் மௌனமாக இருப்பது ஏன்? சர்வதேசமே உன் அமைதியை கலைத்து ஒடுக்கப்படும் தமிழ் இனத்திற்கு விடிவைப் பெற்றுத்தரவேண்டும். இந்த உரிமைக் கோசத்தை மார்ச் 5ம் திகதி ஐநா முன்றலில் ஒருமித்த குரலில் ஓங்கி ஒலிப்போம்;. அழிவுகளும் அடக்கு முறைகளும் தமிழ் இனத்திற்கு புதிதல்ல விழ விழ எழுவோம். முள்ளிவாய்க்கால் விடுதலைப் போரின் முடிவல்ல அது ஓர் வரலாற்றுத் திருப்பம் என்பதை இவ்வுலகிற்கு இடித்துரைப்பதற்கு அலைகடலாக திரண்டுவருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.