பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2013

அமெரிக்க ஓபன்: லியண்டர் பயெஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன்: லியண்டர் பயெஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
செஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆண்களுக்கான காலிறுதி இரட்டையர் போட்டியில் உலகின் 4-ம் நிலை ஆட்டக்காரர்களான இந்தியாவின் லியாண்டர் பயெஸ், செக்- ரிபப்ளிக்கின் ரடெக் ஸ்டெபானிக்குடன் ஜோடி சேர்ந்து விளையாடினர். 


இவர்கள் 5-ம் நிலை ஆட்டக்காரர்களான அயிசம் உல் ஹக் குரேசி (பாகிஸ்தான்)-ஜீன் ஜூலியன் ரோஜர் (டென்மார்க்)  ஜோடியை சந்தித்தனர். இரண்டரை மணி நேரத்திற்கு நடைபெற்ற இப்போட்டியில் லியண்டர் பயெஸ் ஜோடியானது 6-1 6-7 (3) 6-4 என்ற செட்டுகளில் பாகிஸ்தான் குரேசி ஜோடியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. 

பயெஸ் ஜோடியானது அரையிறுதிப்போட்டியில் முதல் நிலை ஆட்டக்காரர்களான அமெரிக்காவின் பிரையன் சகோதரர்களை சந்திக்கவுள்ளனர்.