பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2013

தூக்குக் காவடி எடுத்து வந்து மயங்கி விழுந்த இளைஞன்: யாழில் சம்பவம்

கோவிலுக்கு நேர்த்தி வைத்து தூக்குக் காவடி எடுத்த இளைஞர்; மயக்கமுற்ற நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


யாழ். பன்னாலை பிள்ளையார் ஆலயத்திற்கு நேர்திக் கடனுக்காக தூக்குக் காவடி எடுத்துச் சென்ற சண்டுகலிங்கம் கோகுலன்(வயது26) என்பவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராகும்.

ஆலயத்திற்கு தூக்குக் காவடியுடன் சென்ற குறித்த இளைஞன் காவடியிலிருந்து இறக்கப்பட்ட பின்னர் மயக்கமுற்று வீழ்ந்ததாகவும் இதனையடுத்து அவர் எழும்பாத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.