பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2013

தமிழ் அரசியல் கைதி பிரான்சிஸ் நெல்சனின் பூதவுடலுக்கு சிறீதரன் எம்.பி அஞ்சலி
2006ம் ஆண்டிலிருந்து களுத்துறைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து மரணித்த பிரான்சிஸ் நெல்சனின் பூதவுடல் முல்லைத்தீவு கருநாட்டுக்கேணியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டிருக்கிறது.
இவரது பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் கருநாட்டுக்கேணியிலுள்ள இல்லத்திற்குச் சென்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபைக்கான தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்ரனி ஜெகனாதன் ஆகியோர் அஞ்சலி செலுத்தியதுடன் அவரது இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இறப்பதுக்கு முதன் நாள் இரவு மனைவியுடன் தொலைபேசியூடாக பேசிய பிரான்சிஸ் நெல்சன், மறுநாள் இறந்த செய்தி தொடர்பில் பல சந்தேகங்களை பொது மக்கள் எழுப்பியுள்ளனர்.