பக்கங்கள்

பக்கங்கள்

19 செப்., 2013


அதிமுக எம்.எல்.ஏ. 
புத்திசந்திரன் கைது
 


சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து நீக்கம் செய்யப்பட்டவரும், நீலகிரி மாவட்ட ஊட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமான புத்திசந்திரன் கைது செய்யப்பட்டார்.   அவருடன் வந்த 29 பேரும் கைது செய்யப்பட்டனர்.



உதகையில் தேர்தல் தேதியை முடிவு செய்ய இளம் படுகர் செயற்குழு கூடியது.  இளம்படுகர் சங்க கூட்டத்திற்குள் நுழைய ஏற்கனவே புத்திசந்திரனுக்கு கோர்ட் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இன்று இளம்படுகர் சங்க கூட்டதிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற எம்.எல்.ஏ.  கைது செய் யப்பட்டார்.  புத்திசந்திரனுடன் வந்து பிரச்சனையில் ஈடுபட்ட 29 பேரும் கைது செய்யபட்டனர்.