பக்கங்கள்

பக்கங்கள்

19 செப்., 2013

சுவிஸ் கிராமத்தில் நடைபெற்ற விபச்சாரம்

சுவிட்சர்லாந்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் செயல்பட்டு வந்த விபச்சார ஒட்டலினை பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.
சுவிஸ் நாட்டில் பெர்ன் பகுதியில் உள்ள ஒரு ஒட்டலில் கலவரம் நடப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.
மேலும் காயங்களுடன் கிடந்த மற்றொரு நபரை மருத்துவமனைக்கு பொலிசார் அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் பிரச்சனைக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தியதில் அங்கு கிளப் 3000 என்பது விபச்சாரம் நடக்கும் இடம் என்றும் இங்கு இணையதளம் மூலம் வேறு நாடுகளிலிருந்து வந்து 10 முதல் 30 பெண்கள் வரை இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொலிசார் விசாரணை மேற்கொண்டு நடத்தி வருகின்றனர்.