பக்கங்கள்

பக்கங்கள்

23 செப்., 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியை போனஸ் ஆசன உறுப்பினராக நியமிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள ஊடகமொன்றில் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.கூட்டமைப்பின் சார்பில்
கிளிநொச்சியில் போட்டியிட்ட ஆனந்த சங்கரி 2796 வாக்குகளை மட்டுமே பெற்றதுடன் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் 6 வது இடத்தில் இருந்தார்.அந்த மாவட்டத்தில் போட்டியிட்ட கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ள இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை சங்கரிக்கு வழங்க தயாராகி வருவதாக தெரியவருகிறது.