பக்கங்கள்

பக்கங்கள்

25 செப்., 2013

அத்வானியின் காலை தொட்டு வணங்கிய மோடி

மத்திய பிரதேசம் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று பாரதீய ஜனதா கட்சியின் பேரணி,  தலைநகர் போபாலில் நடைபெறுகிறது. இந்த பேரணியில் கட்சியின் தலைவர்
ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் அத்வானி, பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, உமா பாரதி மற்றும் மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் உள்பட பல தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் இருந்த போது, மூத்த தலைவர் அத்வானி நரேந்திர மோடிக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். அப்போது நரேந்திர மோடி அத்வானியின் காலை தொட்டு வணங்கினார். பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க அத்வானி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எதிர்ப்பையும் மீறி மோடி பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட்டார். அதனை அடுத்து இருவரும் ஒன்றாக சேர்ந்து கலந்து கொண்ட முதல் கூட்டம் இதுவாகும். பாரதீய ஜனதா கட்சியின் தொண்டர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.