பக்கங்கள்

பக்கங்கள்

25 செப்., 2013

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் இன்றைய தினம் தனது வாய் மூல அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளார்.
சுவிட்சலாந்து நேரம் 2.00 மணிக்கு பிற்பாடு ( இலங்கை நேரம் 5.30 பி.ப) சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ் அறிக்கையில் அண்மையில் இலங்கை சென்று வந்த விடயங்கள் இடம் பெற உள்ளமையால் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள், இராஜதந்திரிகள் பலத்த ஆர்வத்துடன் உள்ளமை இங்கு அவதானிக்க கூடியதாக உள்ளது.

இலங்கை அரசாங்கம் பலத்த அச்சமடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. மனித உரிமைகள் தொடர்பில் எது வித முன்னேற்றமும் இடம் பெறாமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.