பக்கங்கள்

பக்கங்கள்

19 செப்., 2013

நடிகர் சங்கத்தில் குமரிமுத்துவை மீண்டும் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கப்படும்: சரத்குமார்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில், நடிகர் குமரிமுத்து
வை அனுமதிக்காததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் நடிகர் ராதாரவி தலையீட்டால் கூட்டத்தில் பங்கேற்க குமரிமுத்து அனுமதிக்கப்பட்டார். கூட்டத்தில் பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து குமரிமுத்து வெளிநடப்பு செய்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பிளவு ஏதும் இல்லை. நடிகர்கள் ஒரே குடும்பமாக இருக்கிறார்கள். கூட்டத்தில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு கூட்டத்திலேயே பதில்கள் தரப்பட்டது. சங்கத்திலிருந்து குமரிமுத்து நீக்கப்பட்டுவிட்டதால் கூட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை. குமரிமுத்துவை மீண்டும் உறுப்பினராக சேர்க்க நடிகர் சிவக்குமார் கோரினார். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதால் குமரிமுத்துவை மீண்டும் சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விதிகளை ஆராய்ந்து குமரிமுத்துவை மீண்டும் சேர்ப்பது பற்றி பரிசீ-க்கப்படும். திரைப்பட நூற்றாண்டு விழாவுக்கு ரூபாய் 10 கோடி நிதி அளித்த முதல் அமைச்சருக்கு சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது என்றார்.