பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சுற்றி வளைத்து இராணுவம் தாக்குதல்: யாழ்.மீசாலையில் பதற்றம்
யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு பகுதியில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு கூட்டமைப்பினரை சுற்றி வளைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை வேட்பாளர் கேசவன் சயந்தன் தகவல் தருகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இராணுவத்தினர் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து வந்து அச்சுறுத்தி வந்தனர்.
இதனையும் மீறி ஒரு கட்டத்தில் அவர்கள் எமது வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இத்தாக்குதலில் கூட்டமைப்பினரின் வாகனங்கள் சில இராணுவச் சிப்பாய்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக பொலிஸாருக்கும் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்