பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2013

கூட்டமைப்பு கோருவது தமிழீழ சுயாட்சியா, சுயநிர்ணயமா?: வாசுதேவ - முஸ்ஸாமில் வாக்குவாதம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் இன்று முற்பகல் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமிலுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான இறுதி ஊடகவியலாளர் மாநாடு இதுவாகும். இதில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மொஹமட் முஸ்ஸாமில் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய முஸ்ஸாமில், வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் தமிழீழ சுயாட்சிக்கான ஆணையாக அதனை வரைவிலக்கணம் செய்யும். இதனால் வடமேல் மற்றும் மத்திய மாகாண மக்கள் அதற்கு எதிரான தமது நிலைப்பாட்டை தேர்தல் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்பது சுயாட்சியால்ல சுயநிர்ணய தீர்மானம் என்றார். இதனையடுத்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுயாட்சி நிர்வாகம் பற்றியே கூறியுள்ளது எனவும் தாம் தமிழ் ஊடகங்களுடன் தொடர்புகளை வைத்துள்ளதாகவும் கூட்டமைப்பு தமிழீழ சுயாட்சியை நோக்கியே செல்வதாகவும் முஸ்ஸாமில் கூறினார்.