பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2013

08h

கழிவு வாய்க்கால் சீரின்மையால் யாழ். கஸ்தூரியார் வீதிக்கருகில் துர்நாற்றம்

முறையாக செப்பனிடப்படாமையால் கழிவு நீர் வீதியில் தேங்கிக் காணப்படுகின்றது.
இதனால் பிரதேச மக்களும் நகருக்கு வருவோரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
யாழ். கஸ்தூரியார் வீதியிலுள்ள கழிவு வாய்க்கால் முறையாக செப்பனிடப்படாமையால் அப்பகுதி துர்நாற்றம் வீசுகின்றது. குறித்த வீதி காப்பெற் வீதியாக்கப்பட்டுள்ள போதும் வடிகால் சீராக்கப்படாமையால் இந்நிலையை எதிர்கொண்டுள்ளது.
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியாக இது இருக்கின்ற போதும் மாநகர சபை இதனை சீர் செய்யவில்லையென வர்த்தகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.