பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2013

வடக்கில் நடமாடும் இந்திய புலனாய்வு பிரிவினர் குறித்து தயா மாஸ்ரர் பதட்டம் 
வடக்கில் தொடருந்து பாதை நிர்மாணிப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள், துணிமணி விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் என இந்திய புலனாய்வு பிரிவை
சேர்ந்தவர்கள் பலர் வடக்கில் நடமாடி வருவது குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த புலனாய்வாளர்கள் தொடர்பாக புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் அரச அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்தியாவை சேர்ந்த சில தொடருந்து தொழிலாளர்கள் மாலை வரை வேலை செய்து விட்டு, பின்னர் யாழ்ப்பாணத்தில் சுற்றி திரிவதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.