பக்கங்கள்

பக்கங்கள்

8 செப்., 2013

சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதான அதிகாரிகள் மூவர் கொழும்பில்! அரசாங்கம் செய்வதறியாது தவிப்ப
சா்வதேச மன்னிப்பு சபையின் பிரதான அதிகாரிகள் மூன்று போ் கொழும்புக்கு சென்றுள்ளனா். சுற்றுலா வீசாவில் கொழும்புக்கு சென்ற அவா்கள் உத்தியோகபூர்வமற்ற முறையில் பல சந்திப்புக்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமகால அரசியல் மற்றும் வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடா்பாக சா்வதேச மன்னிப்பு சபையின் அதிகாரிகள் அறிந்து கொள்வதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவநீதம்பிள்ளை கொழும்பு சென்று திரும்பிய பின்னா் சா்வதேச மன்னிப்பு சபையின் அதிகாரிகள் சுற்றுலா வீசாவில் கொழும்பு சென்றுள்ளமை தொடா்பில் பல கேள்விகள் எழுந்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
ஊடக சுதந்திரம் மனித உரிமை மீறல்கள் தொடா்பான விடயங்களில் அவா்கள் கூடுதல் கவனம் செலுத்தியதாக கொழும்பில் உள்ள இந்திய செய்தியாளா் ஒருவா் தகவல் வெளியிட்டார்.
இவா்கள் கொழும்பில் மாத்திரமே தங்கியிருந்து முக்கியமான நபா்களை சந்தித்து கலந்துரையாடுவதாகவும் அந்த இந்திய செய்தியாளா் கூறினார்.
இவா்கள் உத்தியோகபூர்வமற்ற முறையில் கொழும்பில் சந்திப்புகளை நடத்துகின்றமை தொடா்பாக அரசாங்கத்துக்கு தெரிந்தாலும் எதுவும் செய்ய முடியாத நிலை காணப்படுவதாக மற்றுமொரு தகவல் கூறுகின்றது.