பக்கங்கள்

பக்கங்கள்

21 செப்., 2013

வேட்பாளர் எம்.எம். ரதன் மீது தாக்குதல் முயற்சி
வட மகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் இலக்கம் 8ல் போட்டியிடும் எம்.எம்.ரதன் மீது தாக்குதல் நடாத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று மாலை 7 மணியளவில் நான்கு வான்களில் வந்த இனம்தெரியாத நபர்கள் அவரது இல்லத்துக்கு அருகாமையில் அமைந்துதுள்ள வீதியில் நின்ற மக்களையும் ஆதரவாளர்களையும் பொல்லுகளால் அடித்து விரட்டியதுடன் இன்று நள்ளிரவுக்குள் தாக்குதல் நடாத்தப்படும் என்றும் எச்சரித்துச் சென்றுள்ளனர் என பண்டாடிக்குள வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ரதன் அவர்கள் நாளைய தினம் கச்சேரியில் நடைபெற இருக்கும் வாக்குகள் எண்ணும் பணிகளை கண்காணிப்பதற்கான முகவர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
கூட்டம் முடிந்து வந்தவேளை சம்பவத்தை மக்கள் முறையிட்ட போது அது தொடர்பில் ரதன் அவர்கள் வவுனியா பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் அவசர தொலைபேசியான 119க்கும் அறிவித்ததை தொடர்ந்து வேட்பாளர் ரதன் அவர்களின் இல்லத்துக்கு பொலிசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார்.