பக்கங்கள்

பக்கங்கள்

21 செப்., 2013

Latest News 

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் காரியாலயம் இராணுவ புலனாய்வாளர்களால் சுற்றிவளைப்பு
கிளிநொச்சியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமாகிய அறிவகத்தை சுற்றி பதினைந்துக்கும் மேற்பட்ட இராணுவப்புலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக்குழுக்கள் அச்சுறுத்தும் வகையில் தற்பொழுது நிலைகொண்டுள்ளனர்.
குறிப்பிட்ட விடயம் குறித்து காவல்துறை அதிகரிக்கு தெரிவித்த நிலையிலும் அது சம்மந்தமாக எதுவித நடவடிக்கையும் குறித்த நேரத்தில் எடுக்கப்படவில்லை.
காரியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பதினைந்துக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.
நாளை நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலை மைய்யப்படுத்தி அவர்களை தாக்கும் நோக்குடன் இச்செயற்பாடு நடைபெற்றுக் கொண்டுள்ளதுடன் தொடர்ந்தும் பதற்ற நிலையே காணப்படுகின்றது.
இந்நிலையில் அங்கு தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தில் இருந்து கண்கானிப்பாளர்களான ஜோசப் ஸ்ராலின், றொக்சான் பெர்னாண்டோ, சுனில் ஜெயசேகர ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து கொண்டு இருக்கின்றனர் என அறிவகத்தில் இருந்து தெரிவித்துள்ளனர்.