பக்கங்கள்

பக்கங்கள்

2 செப்., 2013

முன்னாள் திமுக அமைச்சர் கோமதி சீனிவாசன் அதிமுகவில் இணைந்தார்
முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், தனது கணவர் சீனிவாசனுடன் முதல்–அமைச்சர் ஜெயலலி தாவை சந்தித்து, தி.மு.க.வில் இருந்து விலகி தங்களை கழகத்தின்
அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.


தி.மு.க.வைச் சேர்ந்த மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் வழக்கறிஞர் எம். பட்டுராஜன்; மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதி மு. மாயாண்டி ஆகியோர் முதல்– அமைச் சரை தனித் தனியே நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
அப்போது, மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ உடன் இருந்தார்.