பக்கங்கள்

பக்கங்கள்

28 அக்., 2013

தயாளு அம்மாளிடம் விசாரணை - சாட்சியம் பதிவு
சென்னை எழும்பூர் பெரு நகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி கோபாலன், கலைஞரின் கோபால புரம் இல்லத்தில் காலை 10 மணியளவில் தயாளு அம்மாளிடம் 2ஜி வழக்கில் விசாரணை மேற்கொண்டு சாட்சியத்தைப் பதிவு செய்வார்.



இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா சார்பில் அவரது வழக்குரைஞர், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் சரத்குமார் மற்றும் கரீம் மொரானி, ஆசிஃப் பால்வா ஆகியோரும் கோபாலபுரம் இல்லத்தில் நேரில் ஆஜராகின்றனர்.
மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாகித் பால்வா, சித்தார்த் பெகுரா, சந்தோலியா உள்பட 12 பேருக்கு சென்னையின் நடைபெறும் விசாரணையின்போது நேரில் ஆஜராவதிலிருந்து தில்லி சிபிஐ நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.