பக்கங்கள்

பக்கங்கள்

21 அக்., 2013



பாமக தலைமையில் சமூக ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் போட்டி: வேட்பாளரை அறிவித்தார் ராமதாஸ்
2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாமக போட்டயிடுகிறது. இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு திங்கள்கிழமை காலை சென்னையில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர்
டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு, பாமக தலைமையிலான சமூக ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். மேலும் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலையும் வெளியிட்டார்.
கிருஷ்ணகிரி தொகுதியில் பாமக தலைவரும், சட்டமன்றக் குழு முன்னாள் தலைவருமான ஜி.கே.மணி போட்டியிடுகிறார்.
அரக்கோணம் தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர் அரங்க வேலு போட்டியிடுகிறார். ஆரணி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார். 

சேலம் தொகுதியில் பாமக மாநில இளைஞரணி செயலாளர் இரா.அருள் போட்டியிடுகிறார். புதுச்சேரி தொகுதியில், பாமக புதுரை மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.கே.ஆர்.அனந்தராமன் போட்டியிடுகிறார்.