பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2013

அவுஸ்திரேலியாவிலிருந்து இன்றும் 33 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றவர்களில் மேலும் 33 பேர் நாடு திரும்பியுள்ளனர். பண்டாரநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகவே அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நாடு திரும்பியுள்ளனர்.
அவுஸ்திரேலியா, கிறிஸ்மஸ் தீவிலிருந்து விசேட விமானத்தின் மூலமாக பலத்த பாதுகாப்புடன் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அந்த குழுவில் 8 பெண்களும் 25 ஆண்களும் இருந்துள்ளதுடன் சிறுவர்கள் எட்டுபேரும் இருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள், திருகோணமலையிலிருந்து மீன்பிடி படகுகள் மூலமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் என்றும் அங்கு அரசியல் அகதி அந்தஸ்து கிடைக்காததையடுத்து திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவிலிருந்து நேற்றும் 40 பேர் திருப்பியனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.