பக்கங்கள்

பக்கங்கள்

16 அக்., 2013


காதல் தோல்வி? வாலிபருடன் இளம்பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!
கொச்சியில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 5.15 மணிக்கு சென்னை அருகே திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரும், சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரும் திடீரென அந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.

திருவள்ளூர் ரெயில்வே போலீசார் இதையொட்டி வழக்குப்பதிவு செய்து உடல்களை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்துகொண்ட இருவரும் யார் என்று அடையாளம் தெரியவில்லை. அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? இருவரும் காதலர்களா, அல்லது கணவன் மனைவியா? தற்கொலைக்கான காரணம் என்ன? அவர்கள் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.