பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2013


கோச்சடையான் ‘சிங்கிள்’ அக்டோபர் 7 ரிலீஸ்!

கோச்சடையான் திரைப்படத்தின் டிரெய்லரில் ரஜினியை இளைமைத் துள்ளலுடனும், அதிரடியான வேகத்துடனும் கண்ட ரசிகர்கள் வாயடைத்துவிட்டனர். 


கோச்சடையான் பெரும்பாலும் ரஜினியின் பிறந்தநாளன்று ரிலீஸாகும் என்று ஒரு பேச்சு நிலவிவந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறது திரையுலகமும் ரசிகர் பட்டாளமும். இந்நிலையில் கோச்சடையான் திரைப்படத்தின் ஒரு பாடல் மட்டும் முதலில் ரிலீஸாகிறதாம். 

வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி கோச்சடையான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘எங்கோ போகிறதோ வானம்’ என்கிற பாடலை மட்டும் சிங்கிளாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறதாம் கோச்சடையான் டீம். ஒரே ஒரு போஸ்டர் ரிலீஸ் செய்ததற்கே துள்ளி குதித்த ரசிகர்களுக்கு பாடல் ரிலீஸாகும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.