பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2013

புலிகளின் தலைவரின் முல்லைத்தீவு வீட்டை பார்க்க மக்களுக்கு திடீர் தடை(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில சுற்றுலா தளங்களுக்கு மக்கள் செல்லமுடியாதவாறு இராணுவத்தினர் கடந்த ஒரு சில வாரங்களாக தடை விதித்துள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வசித்த வீடாக கருதப்படும் நிலக்கீழ் வீடு, கடற்புலிகளின் தலைவர் சூசை வசித்த வீடு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள ஜோர்தான் கப்பல் மற்றும் விசுவமடு பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் சிறை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்
கு தற்போது இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இந்த இடங்களுக்கு பெருமளவான சுற்றுலா பயணிகள் தினமும் சென்று பார்வையிட்டு வந்தனர்.

நிலக்கீழ் வீடு அமைந்துள்ள பகுதியில் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதனால் அதனை பார்வையிட தற்போது அனுமதிப்பதில்லை என அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் தெரிவித்தனர்.

ஆனால் மற்றைய இடங்களில் காவல் கடமையில் இருந்த இராணுவத்தினர் எதற்கென்று தெரியாது மேலிடத்து உத்தரவுக்கு அமையவே அவற்றை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அதேவேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள ஜோர்தான் நாட்டு கப்பல் இரும்புக்காக விற்கப்பட்டுள்ளதாகவும் அதனை இரும்புக்கு வெட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.