பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2013

அண்ணாநகரில் பட்ட பகலில் இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை

¨சென்னை அண்ணாநகரில் சாலையில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென பைக்கில் இருந்து இறங்கியுள்ளார். உடனே பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து அப்பகுதியில் சென்றுக்கொண்டிருந்த சரஸ்வதி என்ற பெண் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் இரண்டு பேரும் பலியாகியுள்ளனர். பட்டபகலில் இந்த சம்பவம் நடைபெற்றது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சரஸ்வதி மற்றும் வாலிபர் டால்டா குமார் அமைந்தகரையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் இளம்பெண் நடுரோட்டில் எரித்துக்கொலை;கொளுத்திய இளைஞரும் தற்கொலை
சென்னை அண்ணாநகரில் நடுத்தெருவில் இளம்பெண் சரஸ்வதி நடந்து சென்றபோது, திடீரென்று பைக்கில் வந்த டால்டாகுமார் பெட்ரோலை அப்பெண்ணின் மீது ஊற்றி கொளுத்திவிட்டார். அந்தப்பெண் எரிந்து மரணம் அடைந்தார்.
பெட்ரோலை தன்  மீதும் ஊற்றிகொண்டு கொளுத்திக்கொண்ட டால்டாகுமாரும் இறந்தார்.