பக்கங்கள்

பக்கங்கள்

8 அக்., 2013

ஆஸி. செல்லவிருந்த 46 பேர் பேருவளை பொலிஸாரால் கைது 
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல தயாரார் நிலையில் இருந்த 46 பேரை பேருவளை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.


இவர்கள் பேருவளை சமனல விளையாட்டு மைதானத்திற்கு அருகில் தயார் நிலையில் இருந்த போது இன்று அதிகாலை 3 மணியளவில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 29 ஆண்கள் 7 பெண்கள் மற்றும் 10 சிறுவர்கள் அடங்குகின்றனர்.

இவர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.