பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2013

நடிகை மாளவிகா பாஜகவில் இணைந்தார்
 ஆறு, ஜெ.ஜெ ஆதி, ஜெயம்கொண்டான், டிஷ்யூம் உட்பட தமிழ் மற்றும் கன்னட மொழிப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா. இவர், தற்போது டிவி மெகா
தொடர்களிலும் நடித்து வருகிறார்.


கடந்தாண்டு கர்நாடகாவில் தேவகவுடாவின், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் சேர்ந்தார். கட்சியை வளர்க்க பாடுபட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், "பா.ஜ.,வில், சேர்ந்து விட்டார்' என, பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மாளவிகா தரப்பில் ஏதும் நேரடியாக பதில் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மாளவிகா, தன் இணையதள பக்கத்தில், ’’நான் பா.ஜ.,வில் சேர்ந்திருக்கிறேன். நரேந்திர மோடியின் சுயசரிதை புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். அவரது, வாழ்க்கை, மக்கள் நலச்சேவைகளின் செயல்பாடு எனக்கு பிடித்திருந்தன. அவர் எனக்கு முன்னுதாரணமாக தெரிந்தார். அவரது கருத்துக்கள் என்னை ஈர்த்தது. எனவே,பா.ஜ.,வில் இணைந்தேன்’’ என, தெரிவித்துள்ளார்.