பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2013

டி.டி. மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2வது நாளாக உண்ணாவிரதம் 

கோரிக்கைகளை வலியுறுத்தி டி.டி. மருத்துவக் கல்லூரியை சேர்ந்த 32 மாணவிகளும், 20 மாணவர்களும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் இன்று 2–வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.


இதில் மாணவர் சிலம்பரசன் (19), திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதவிர மேலும் 4 மாணவிகளின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மாணவ–மாணவிகள் தெரிவித்தனர்.