பக்கங்கள்

பக்கங்கள்

17 அக்., 2013

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கை குடும்பம் மீண்டும் சுவிட்ஸர்லாந்து திரும்பினர்
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கை குடும்பம் ஒன்றுக்கு மீண்டும் சுவிட்ஸர்லாந்து வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த குடும்பத்தினர் இந்த வாரம் சுவிட்ஸர்லாந்துக்கு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய் ஒருவரும் இரண்டு பிள்ளைகளுமே சுவிட்ஸர்லாந்து திரும்பியுள்ளனர்.
குறித்த தாயின் தேகாரோக்கியத்தை கருத்திற் கொண்டே அவர்கள் மீண்டும் சுவிட்ஸாந்து திரும்புவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சுவிட்ஸர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட குறித்த தாய் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட பின்னர் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து சுவிட்ஸாலாந்தின் கொழும்பு தூதரக அதிகாரிகள் அவரை சென்று பார்வையிட்ட அடிப்படையில் இலங்கையில் இருந்தே அவருக்கு சுவிட்ஸர்லாந்துக்கான விசா அனுமதி கிடைத்துள்ளது.
இதனையடுத்தே அவர்கள், சுவிட்ஸர்லாந்து திரும்பியுள்ளனர்.