பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2013

யாழ்.நாச்சிமார் கோயில் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்
யாழ். நாச்சிமார் கோவில் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்  அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அரியாலை, நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த மார்க்கண்டு லோகராணி (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டதாக அப்பெண்ணின் மாமனார் அடையாளம் காட்டியுள்ளார்.
குறித்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ். கொழும்புத்துறை கன்னியர்மடக் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 3ம் திகதி காப்பகத்தலிருந்து வெளியேறிய குறித்த பெண் காணாமல் போயுள்ளார்.
இவரைக் காணவில்லையென கடந்த 4ம் திகதி யாழ். பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணின் பெரியம்மாவினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
இம் மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகங்கள் வலுப்பெற்றிருக்கும் நிலையில்,  அப் பெண் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.